உதகையில் அண்ணல் காந்தியடிகளின் 158 வது பிறந்த நாள் விழா மற்றும் கதர் ஆடை விற்பனை துவக்க விழா
*உதகையில் அண்ணல் காந்தியடிகளின் 158 வது பிறந்த நாள் விழா மற்றும் கதர் ஆடை விற்பனை துவக்க விழா*
ஊட்டி:அக்:03
நீலகிரி மாவட்டம் உதகையில் மகாத்மா காந்தி அடிகளின் 158 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உதகை சேரிங்கிராசஸில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்தியத்திருநாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினை முழுமையாக அர்பணித்த மகாத்மாவின் நினைவுகளைப்போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2:ஆம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும்
கொண்டாடப்பட்டு வருகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அரசுத் துறையை சார்ந்த அதிகாரிகள் மற்றும் காந்தியவாதிகளும் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் திரளாக கலந்துக் கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சேரிங் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள கதர் வஸ்திரலாயத்திற்கு சென்று அண்ணலின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு அங்கு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.