Loading...

உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் எஸ்.பி நடவடிக்கை! போக்சோ வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி

A

Admin

October 28, 2026 • 04:41 AM

உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் எஸ்.பி நடவடிக்கை! போக்சோ வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி

உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் எஸ்.பி நடவடிக்கை! போக்சோ வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், தொண்டி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு சாதகமாக செயல்பட முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆசைக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னணி தொண்டி அருகே தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடந்த மாதம் ஒருவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபரை பிணையில் வெளியே கொண்டுவருதற்காக அவரது சித்தப்பா மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தாகக்கூறப்படுகிறது. அப்போது, உதவி ஆய்வாளர் ஆசைக்குமார், நீதிமன்ற நடைமுறைகளில் தனக்கு உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி, கையூட்டு பெற்று அவரைப் பிணையில் வெளியேகொண்டு வர உதவுவதாக கூறியதாகப் புகார் எழுந்தது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம், பாலியல் தொல்லை சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும், தான் பொய்யாகப் புகார் அளித்ததாகவும் கூறுமாறு அறிவுறுத்தியதாக வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தொலைபேசி உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவை ஆதாரமாககொண்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் ஆசைக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவரைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது

- Advertisement -