Loading...

உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் NSS சிறப்பு முகாம் – மரக்கன்றுகள் நடும் விழா

A

Admin

September 29, 2026 • 12:58 PM

உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் NSS சிறப்பு முகாம் – மரக்கன்றுகள் நடும் விழா

உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் NSS சிறப்பு முகாம் – மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை, செப். 30

மதுரை உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற NSS சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சேதுபதி மேல்நிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் K.R. முரளிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் P. முருகன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஏராளமான மரக்கன்றுகளை நட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை NSS திட்ட அலுவலர் R. கண்ணன் சிறப்பாக செய்திருந்தார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் NSS தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். மரங்களை பாதுகாத்து வளர்ப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

- Advertisement -