ஊட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் கல்வித் திட்டம் முகாம்
ஊட்டியில்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் கல்வித் திட்டம் முகாம்
ஊட்டி:அக்:16
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் உறுப்பினர் கல்வித் திட்டம்
கோடேரி கெந்தலா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர்களுக்கான உறுப்பினர் கல்வித் திட்டம் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்றது.
இந்த கல்வி திட்ட முகாமில் வரவேற்புரை நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர்
கூட்டுறவு சார்பதிவாளர் கௌரிசங்கர். நீலகிரி மாவட்ட மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர்/ துணைப்பதிவாளர் சி.அய்யனார் கூட்டுறவு துறை மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் தொடர்பான திட்டங்கள் கூட்டுறவு வங்கியின் டிஜிட்டல் சேவைகள் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சேவைகள் குறித்து விரிவான முறையில் எடுத்துரைத்தனர் இதில் கெந்தலா
கிராமத்தைச் சேர்ந்த மணி மனோகரன் ஆகியோர் வாழ்த்துரைகள் வழங்கினார்கள் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் என்னென்ன கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என மேற்பார்வையாளர் பால்முருகன் அவர் சிறப்பாக எடுத்துரைத்தார் இந்த நிகழ்ச்சியின்
நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தே.சித்ரா பேசிய போது கூட்டுறவு இயக்க வரலாறு, கூட்டுறவு இயக்கம் கொள்கைகள் கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கி செயல்பாடுகள் குறித்தும்
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கியில் வழங்கப்படும் கடன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் கூட்டம் நிறைவில் சங்கத்தின் செயலாளர் பிரபுராஜ் அவர் நன்றியுரையாற்றினார் முகாமில் ஊர் பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சங்கப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.