ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் வெற்றித் தமிழகம்
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் சென்னை, கலைவாணர் அரங்கில் வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 11 மாவட்டங்களுக்கான முதல் மண்டல மாநாட்டில் அலுவலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் (பயிற்சி) டாக்டர் ஆனந்தகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர், அமுதவல்லி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் மரு. ஆர்த்தி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் அரசு ஆலோசகர் முனைவர் பழனிதுரை, கூடுதல் இயக்குநர்கள், தலைமை பொறியாளர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.