ஊர்கணக்கு கேட்டால் மிரட்டுவதாகவும் பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு பணம்பெறுவதாக புகார்
ஊர்கணக்கு கேட்டால் மிரட்டுவதாகவும் பள்ளி ஆசிரியர் நியமனத்திற்கு பணம்பெறுவதாக புகார்
ராமநாதபுரம் மாவட்டம்
கமுதி பேரூராட்சி தலைவராக இருக்கும் அப்துல் வஹாப் சகாராணியின் ஊர் சுந்தராபுரம்ஆகும் இங்குள்ள ஊர் ஜமாத்தில் இருக்கக்கூடியதும் வக்பு வாரியத்தில் பதிவானதாக கூறப்படும் இக்பால் உயர்நிலைப் பள்ளியில் கரஸ்பாண்டாகவும் சகாராணி தான் இருக்கிறார் இந்த பள்ளிக்கூடத்திற்கு புதிதாக ஆசிரியர் நியமனம் என்ற பெயரில் பல லட்சங்களை நியமிக்கப்படும் ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்கிறார் இதுகுறித்து ஊரில் இருக்கும் மக்கள் ஏதேனும் சந்தேகங்கள் கேட்டாலோ ஊரில் படித்திருக்கும் பெண்களுக்கு ஆசிரியர் பதவி கேட்டாலோ உடனடியாக அவர்களை ஊரை விட்டு தள்ளி வைத்து விடுகிறார்கள் இது சம்பந்தமாக தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பலமுறை புகார் செய்தும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை புகார் செய்யும் நபர்களை தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நாங்கள் புகார் அளித்திட்டு வருவதற்கு முன்பாகவே புகார் தாரரின் புகைப்படம் அவரது தொலைபேசி எண்கள் இவை எல்லாத்தையும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சகாராணிக்கு தெரியப்படுத்தி விடுகிறார்கள் .புகார் அளித்திட்டு ஊருக்கு வந்தால் இவர்கள் இரவில் வந்து தனியாக இருக்கும் பெண்களை பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுகிறார்கள் மேலும் இக்பால் பள்ளிக்கு வக்பு வாரியத்தில் என்.ஓ.சி. வாங்கியதாக தெரியவில்லை இது இன்று மாறும் நாளை மாறும் என்று நாங்களும் பொறுத்துக் கொண்டிருந்தால் இது மாதிரியான தொடர்ச்சியான வன்முறையை இந்த பேரூராட்சி தலைவர் தனது அரசியல் பலத்தாலும் ஒரு சில காவல்துறை உதவிகளோடும் இந்த அராஜக போக்கு கடந்த 40 ஆண்டு காலமாக ஊரில் நடந்து கொண்டுதான் இருக்கிறது இது சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் தகுந்த முறையில் விசாரணை செய்து எங்கள் சுந்தராபுரம் ஊர் மக்களையும் காப்பாற்றி தரும்படி சுந்தராபுரத்தை சேர்ந்தவரும் 62. ஆர்.கே.வி. அவென்யூ இரண்டாவது தெரு பல்லாவரம் முகவரியில் வசிக்கும் ஜமால் ஆகிய நான் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்