Loading...

என்.எஸ்.எஸ். சார்பில் 7 - நாள் சிறப்பு முகாம் நிறைவு

A

Admin

October 03, 2026 • 05:40 AM

என்.எஸ்.எஸ். சார்பில் 7 - நாள் சிறப்பு முகாம் நிறைவு

என்.எஸ்.எஸ். சார்பில் 7 - நாள் சிறப்பு முகாம் நிறைவு


இராமநாதபுரம் அக் -04

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் லதா(கூ. பொ)

உத்தரவின்படி, இணை இயக்குனர் சாந்தி வழிகாட்டுதலில் மாவட்ட முதன்மைக் கல்வி அவவலர் பாலதண்டாயுதபாணி ஆலோசனை

யில் , நாட்டுநலப்பணிதிட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் மேற்பார்வையில்7- நாள் சிறப்பு முகாம் காலாண்டுத் தேர்வு விடுமுறையில் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 45 அமைவுகளில் கடந்த செப்டம்பர் 26-ல் தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை 7- நாள் நடைபெற்றது.

இந்த நாட்டுநலப்பணிதிட்ட சிறப்பு முகாமில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு , நெகிழி பை ஒழிப்பு கருத்தரங்கு, டெங்கு ஒழிப்பு ,மஞ்சள் பயன்பாடு,சிக்கன்குனியா ஒழிப்பு , கொரொனா ஒழிப்பு உட்பட பல்வேறு விழிப்புணர்வு பேரணிகளும், மாணவர்

களுக்கு மனநலம் மற்றும்

உளவியல்

சார்ந்த விழிப்புணர்வு, மற்றும் கால்நடை மருத்துவ முகாம், பொது மருத்துவம் மற்றும் ஆலோசனை முகாம், கண்பரிசோதனை, தீ விபத்து மற்றும் தடுப்பு, கொசு ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு,

உயர்கல்வி வழிகாட்டி போன்ற முகாம்களும், பள்ளி மற்றும் தெருக்கள், வழிபாட்டுத்

தளங்கள் ஆகிய இடங்களில் நாட்டுநலப்பணிதிட்ட தன்னார்வளர் மாணவர்கள் உழவாரப்பணிகளில் ஈடுபட்டனர்.இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தண்டாயுத

பாணி, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் மற்றும் மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் ஆகியோர் முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

- Advertisement -