எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா: 4,200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கல்
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா: 4,200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கல்
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று மாணவிகளுக்குப் பதக்கம் வழங்கி வாழ்த்து
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை பட்டதாரிகளுக்குப் பட்டங்களை வழங்கிய பல்கலைக்கழக நிர்வாகம்
திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் நடைபெற்ற டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் 4,200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவமனை கன்வென்ஷன் அரங்கில் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவ, மாணவிகளுக்குப் பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கிச் சிறப்பித்தார். இத்தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பயின்ற 4,200 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது, பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் சிறப்புரையாற்ற, தலைவர் எர். ஏ.சி.எஸ். அருண் குமார் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.