ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்
ஒப்பந்த செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்
மதுரை அக் 18
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்குதல் மற்றும் புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள்்கல்லாணை, தங்கப்பாண்டி, கருப்பையா, கோபிசன்,.விஜய், மதுரை மாநகராட்சி மேயர் (பொ) / துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில்
புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, புத்தாக்கப் பயிற்சியைத் துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது நல்வழிகாட்டுதலில்,
மகளிர் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக
மருத்துவத் துறையில் ஓராண்டிற்கும் மேலாக காலியாக இருந்த தற்காலிக செவிலியர் பணியிடங்களை அந்தந்த மாவட்ட நலச் சங்கங்கள் வாயிலாகத் தேர்வு செய்து பணியமர்த்திட 11.09.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 118 தற்காலிக செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்காக பெறப்பட்ட 2,070 விண்ணப்பங்களில் இருந்து 1,770 தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. விண்ணப்பதாரர்களின் பள்ளிக் கல்வி மற்றும் செவிலியர் பட்டய/பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் விகிதாச்சார அடிப்படையில் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில் 111 காலிப்பணியிடங்களுக்கு இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியான செவிலியர்கள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய உன்னதமான சேவையை ஆற்றவிருக்கும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும், அவர்களின் மருத்துவப் பணி சிறக்க வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.அருள் சுந்தரேஷ் குமார், இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.இராமசந்திரன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பொற்ச்செல்வன்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பலர் கலந்து
கொண்டனர்.