ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் இறப்பு.நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
ஓமலூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் இறப்பு.நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
ஓமலூர், அக்-2
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிபட்டி நடுவீதி பகுதியை சேர்ந்தவர் அரசகு மார், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி அமலா. வங்கி ஊழியர். இந்த தம்ப திக்கு சசிரேகா (வயது 19) என்ற மகளும், கிரிவாசன் (17), அருண்குமார் (15) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இவர்களில் அருண்குமார் காடை யாம்பட்டியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நைனாகடு
செல்லும் வழியில் உள்ள மூடப்பட்டுள்ள கல்குவாரி குட்டையில் நேற்று அருண்குமார் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
அங்கு குட்டையில் இறங்கி குளித்த போது அருண்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்ற போதும் முடியவில்லை இதை அடுத்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காடையாம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் காடையாம்பட்டி நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருண்குமாரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கல்குவாரி குட்டை மிகவும் ஆழமாக இருந்துதாலும் இரவு நேரம் என்பதாலும் தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கல்குவாரியில் மூழ்கிய மாணவன் உடலை தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து கல்குவாரியில் மூழ்கிய மாணவன் உடலை தீயணைப்பு படையினர் தேடி கண்டன. பல மணி நேரம் கழித்து காலையில் மாணவரின் உடல் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கல்குவாரி குட் டையின் கரையில் இருந்து இறந்த மாணவனின் பெற்றோர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.
காடையாம்பட்டி வட்டாரத்தில் காலாவதி ஆகி மூடப்பட்ட பல கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. எனவே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க, அரசு அனுமதி காலாவதியாகி மூடப்பட்ட கல் குவாரி குட்டைகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.