ஓமலூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி .போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை
ஓமலூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி .போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை
சேலம் அக்டோபர் 18 :ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி விவசாய கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த.
சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்
அரங்கனூரை சேர்ந்த சரவணன்(36) என்பவர், இன்று மாலை வேலை முடிந்து டேனிஷ்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
அப்போது, அவர் நின்றிருந்த புளிய மரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில், சரவணன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீவட்டிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இடி-மின்னலுக்கு பலியான சரவணனுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.