Loading...

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு உறுதிமொழி

A

Admin

November 07, 2026 • 06:27 AM

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு உறுதிமொழி

கந்தர்வகோட்டை நவ 08

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடுநிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் முருகதாஸ் தீபாவளி பண்டிகையின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை விளக்கிக் கூறினார். இந்நிகழ்வில் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது பட்டாசுகள் கொளுத்தும் இடத்திற்கு அருகாமையில் ஒரு வாளி தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும், பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக் கொண்டோ அல்லது உடலுக்கு அருகாமையிலோ வெடிக்க கூடாது, மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்து வெடிக்க வேண்டும், ராக்கெட்டுகளை வெட்டு வெளியில் குடிசைகள் இல்லா பகுதிகளில் மட்டுமே செலுத்த வேண்டும், குழந்தைகள் பட்டாசுகளை பெற்றோர்களின் முன்னிலையில் அவர்களது பாதுகாப்பின் கீழ் வெடிக்க வேண்டும், வெடிக்காத பட்டாசுகளை குனிந்து பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும், விவரம் அறியாத இளஞ் சிறார்களை வெடிகளை கொளுத்ல அனுமதிக்காமல் இருத்தல் வேண்டும். உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிப்போம் ஆகியோர் பட்டாசு வெடிக்கும் பொழுது வந்தால் அவர்கள் பாதுகாப்பாக கடந்து சென்ற பின்னர் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பட்டாசுகளை மின்சாதன பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு உருளை அருகில் வைத்து வீடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், விலங்குகளை துன்புறுத்தும் வகையில் அவைகள் பயப்படும் வகையிலோ பட்டாசுகளை வெடிக்க கூடாது, பறவைகள் அடைக்கலம் ஆகும் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க செய்வதை தவிர்த்து விட வேண்டும், மூடிய பெட்டிகளில் பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது, பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைக்கு முன்னரோ அருகிலோ வெடிக்க கூடாது, நோயாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்க கூடாது, பெட்ரோல் மற்றும் எழுதில் தீப்பற்றக்கூடிய பொருள்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கவோ கொளுத்தவோ கூடாது, அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை வெடிக்க கூடாது. ஏனெனில் உடலையும் மனநிலையும் பாதிக்கும் காதுகள் செவிடாகக் கூடும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வாழ்நாள் முழுவதும் துன்பப்பட வேண்டாம். அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த விபத்தற்ற தீபாவளியாக விழிப்புணர்வோடு கொண்டாட வேண்டும் என அறிவுரை வழங்கினார். முன்னதாக மாணவர்கள் அனைவரும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட உறுதிமொழி எடுத்துக்
கொண்டனர்.

- Advertisement -