கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு.
கந்தர்வகோட்டை அருகே தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் திறனறிவுத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு. கந்தர்வகோட்டை அக் 31 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி நந்தினி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சீதா அனைவரையும் வரவேற்பு செய்தார். நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பிச்சைமுத்து கலந்து கொண்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பேசும் பொழுது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் துளிர் திறனறிவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வினை நமது மட்டங்கால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொண்டு சிறப்பாக தேர்வு எழுதி தேர்வு பெற்று வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிவுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் போட்டி தேர்வு எழுதுவதற்கு இத்தேர்வு முதன்மை தேர்வு அமையும் எனவே அனைத்து மாணவர்களும் இந்த ஆண்டு 2026 நவம்பர் மாதம் நடைபெறும் துளிர் திறனறிதல் தேர்வில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு எதிர்காலத்தில் போட்டி தேர்வு எழுதக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய தலைவர் ரகமதுல்லா பேசும் பொழுது தமிழ்நாடு அறிவில் இயக்கம் கடந்த 35 ஆண்டுகளுக்கு மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிடும் வெளியீடுகளை படிக்க வேண்டும். துளிர் மாத இதழை ஒவ்வொரு மாதமும் படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து விஞ்ஞானியாக வளரக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வழங்கி வருகிறது அந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். முன்னதாக தேர்வில் கலந்து கொண்ட 50 மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை செய்லு காண்பித்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கீதாஞ்சலி, சிவகலா, மோகன ராதா, பிரேமா, கணினி உதவியாளர் சௌமியா, இளநகை, மற்றும் சாந்தமலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.