கமுதி சத்திரிய நாடார் பெண்கள் பள்ளியில் ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவமுகாம்
கமுதி சத்திரிய நாடார் பெண்கள் பள்ளியில் ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவமுகாம்
கமுதி , செப்.28-
ராமநாதபுரம் மாவட்டம்
கமுதியில் உள்ள சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் கமுதி லயன்ஸ் கிளப் இணைந்து முத்துமாரியம்மன் பால்பண்ணையில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர்.
இந்த முகாமில்
பள்ளி முதல்வர் சிந்துமதி வரவேற்புரை நிகழ்த்தினார்
பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சுந்தரமூர்த்தி பள்ளி மாணவிகளிடம் ரேபிஸ் வெறிநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உரையாற்றினார்.இதனை தொடர்ந்து
பேரையூர் கால்நடை மருந்தக டாக்டர் இம்ரான் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசிகளை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் கமுதி டவுன் லயன்ஸ் கிளப் தலைவர், செயலாளர் சண்முகராஜ்
பாண்டியன், ஆறுமுகம்(எ) வி.பி.பொன்.ஜி, சிவலிங்கம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முகாமில் நிறைவில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிதம்பரம் நன்றி கூறினார்.