கமுதி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை நடத்தினர் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு அலுவலர்களுக்கு மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்க ஒத்திகை நேற்று
கமுதி தீயணைப்பு துறையினர் வடகிழக்கு பருவமழை காலத்தில் மீட்புப் பணிகள் குறித்து ஒத்திகை நடத்தினர்
ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அரசு அலுவலர்களுக்கு மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்க ஒத்திகை நேற்று நடைபெற்றது. கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் சின்னத்துரை தலைமையில், வட்டாட்சியர் அய்யாதுரை, கமுதி தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய பொறுப்பாளர் உத்தண்ட சாமி முன்னிலையில், வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை பேரூராட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைதுறை, மருத்துவத்துறை உள்பட 13 அரசுத்துறை அலுவலர்களுக்கு, வடகிழக்கு பருவமழையை எவ்வாறு எதிர்கொள்வது என சிறப்பு பயிற்சிசெயல் விளக்கஒத்திகை நடைபெற்றது.
இதில் பெரு வெள்ளத்தில் சிக்கும் உயிரினங்கள், பொது மக்களை எவ்வாறு மீட்பது. மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகுறித்தும, பொதுமக்களுடன் இணைந்து அரசு துறை அதிகாரிகள் மீட்புப் பணிகளில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கமுதி துணை வட்டாட்சியர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேகராஜ், சந்திரசேகரன், பேரூராட்சி செயல்அலுவலர்கள் யசோதா(கமுதி), மாலதி(அபிராமம்), பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் காப்பியக்கனி உள்பட 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.