கமுதி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள், வாக்காளர்அட்டை ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்
கமுதி வட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை, ஆதார் அட்டைகள், வாக்காளர்அட்டை ஒப்படைத்து கிராம மக்கள் போராட்டம்
கமுதி ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி அருகே உள்ள இலுப்பைகுளம் கிராம மக்கள் நேற்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க, முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் வகையில், நந்திசேரி விலக்கு சாலை பகுதியிலிருந்து கடமங்கலம் கிராம விளக்கு சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்படுவதால் இலுப்பைகுளம் கிராம கண்மாய்க்கு, மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் எங்களுக்கான விவசாயம் பாதித்து, வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடந்த 10 நாட்களாக வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் பாலம் அமைக்கும் பணியில் மும்முரமாக இருப்பதாக கிராம மக்கள் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கமுதி வட்டாட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்படுவதால் கண்மாயிக்கு வரும் மழைநீர் தடுக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலுப்பைகுளம் கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டத்த்தில் ஈடுபட்டனர்.