Loading...

கமுதியில் புனித கல்லறைத் திருநாள் வழிபாடு:

A

Admin

November 02, 2026 • 12:29 PM

கமுதியில் புனித கல்லறைத் திருநாள் வழிபாடு:

கமுதியில் புனித கல்லறைத் திருநாள் வழிபாடு: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள புனிதஅந்தோணியார் மற்றும் புனித அருளானந்தர் ஆலயங்களின் சார்பில், இறந்தவர்களின் நினைவைப் போற்றும் புனித கல்லறைத் திருநாள் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நவம்பர் 2-ஆம் தேதி கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படும் இத்திருநாளை முன்னிட்டு, கமுதி பகுதியில் உள்ள கிறிஸ்தவக் கல்லறைகள் பல வண்ண மலர்களாலும், மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிகாலை முதலே தங்களின் முன்னோர்கள் மற்றும் மறைந்த உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்ற குடும்பத்தினர், புற்களை அகற்றி தூய்மைப்படுத்தி, மலர் மாலைகள் சாத்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மாலையில், பங்குத்தந்தை தலைமையில் கல்லறைத் தோட்டத்தில் சிறப்புத் திருப்பலியும், கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கல்லறைகளின் மீதும் பங்குத்தந்தை புனித நீர் தெளித்து சிறப்பு ஆசீர்வாதம் செய்தார். தங்களின் குடும்பங்களில் மறைந்த முன்னோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அவர்களின் நல்வாழ்வு ஆசிகளுக்காகவும் உறவினர்கள் அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி உருக்கமாகப் பிரார்த்தனை செய்தனர். இந்த வழிபாட்டு நிகழ்வில் கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவப் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

- Advertisement -