Loading...

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் சுழன்று சுழன்று மக்கள் பணியாற்றும் தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ PLA.ஜெகநாத் மிஸ்ரா: பொதுமக்கள் நெகிழ்ச்சி மற்றும் பாராட்டு

A

Admin

October 11, 2026 • 03:51 AM

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் சுழன்று சுழன்று மக்கள் பணியாற்றும் தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ PLA.ஜெகநாத் மிஸ்ரா: பொதுமக்கள் நெகிழ்ச்சி மற்றும் பாராட்டு

கம்பம் சட்டமன்றத் தொகுதியில் சுழன்று சுழன்று மக்கள் பணியாற்றும் தமிழக வெற்றி கழகம் எம்.எல்.ஏ PLA.ஜெகநாத் மிஸ்ரா: பொதுமக்கள் நெகிழ்ச்சி மற்றும் பாராட்டு!



அக் 10



கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் PLA.ஜெகநாத் மிஸ்ரா அவர்களின் அதிரடி நடவடிக்கை மற்றும் தொடர் மக்கள் பணி, தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

"என் தொகுதி மக்கள் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைத்துள்ளார்கள். எனவே, மக்களுக்காக நான் ஓயாது உழைப்பேன், என்றும் தூங்க மாட்டேன்" என்ற உறுதிமொழியுடன் களமிறங்கியுள்ள இவர், இரவும் பகலும் பாராமல் தொகுதி முழுவதும் சுழன்று பணியாற்றி வருகிறார்.

உடனடி நடவடிக்கை – ஸ்பாட்டிலேயே தீர்வு

குடிநீர் விநியோகம், வடிகால் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு, தெருவிளக்கு வசதிகள், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அரசு கடனுதவிகள் (Loans) உரிய பயனாளிகளுக்குச் சென்றடைவது வரை அனைத்துப் பணிகளையும் நேரடியாகக் களத்தில் நின்று முடக்கி விட்டுள்ளார்.

பொதுமக்கள் தங்களின் குறைகளைக் கூறிய அடுத்த கணமே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிட்டு, பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பாகவே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு (Spot) சென்று குறைகளைத் தீர்க்கும் வகையில் அதிரடி காட்டி வருகிறார்.

துடர்ந்து தொடரும் திடீர் ஆய்வுகள்

கிராமப்புறங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் எந்நேரமும் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன், அரசு அலுவலகங்களுக்கும் திடீர் விசிட் (Surprise Visit) அடித்து வருகிறார். மக்கள் அளிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து பணிகளை விரைவுபடுத்துகிறார்.

எளியோர் மற்றும் மாணவர் நலன்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சிறப்புத் திட்டங்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் அனைத்தும் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்து வருகிறார். தமிழ்நாடு அரசு கொண்டுவரும் அனைத்து மக்கள் நலச் திட்டங்களையும் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

அமைச்சர் பதவி வழங்கத் தொகுதி மக்கள் கோரிக்கை

இவரது சுறுசுறுப்பான மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையைக் கண்டு கம்பம் தொகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்தகைய துடிப்புமிக்க மக்கள் பிரதிநிதிக்கு மேலும் உயரிய அங்கீகாரமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் உரிய கள ஆய்வு மேற்கொண்டு, PLA.ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என கம்பம் தொகுதி பொதுமக்கள் அன்புக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -