Loading...

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

A

Admin

October 16, 2026 • 02:27 AM

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு


ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே எஸ்.டி. சேதுராஜபுரத்தில் வெறிநாய்கள் துரத்தியதில் கிணற்றில் விழுந்த மூன்று வயது பெண் புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

எஸ்.டி. சேதுராஜபுரத்தைச் சேர்ந்த தங்க முனியம்மாளுக்குச் சொந்தமான கிணற்றில், வெறிநாய்கள் துரத்தியதில் மூன்று வயதுடைய பெண் புள்ளி மான் விழுந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, புள்ளி மானைப் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

- Advertisement -