Loading...

கீழக்கரை அருகே 1½ பவுன் நகை வழிப்பறி குற்றவாளி கைது

A

Admin

September 24, 2026 • 09:33 AM

கீழக்கரை அருகே 1½ பவுன் நகை வழிப்பறி  குற்றவாளி கைது

கீழக்கரை அருகே 1½ பவுன் நகை வழிப்பறி குற்றவாளி கைது
ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பக்கிரப்பா தர்கா, கிதார் அமீன் தோப்பு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற வீரன்வலசை கோத்தக்கோட்டையை சேர்ந்த வள்ளி (50) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி 1½ பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி சந்தீஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் தலைமையில் தனிப்படை அமைத்து கீழக்கரை போலீசார் தீவிர தேடுதல் நடத்தினர்.48 மணி நேரத்தில் ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த கோட்டர் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 1 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

- Advertisement -