Loading...

கீழக்கரை புதிய அரசு மருத்துவமனையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி தவெக நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் அமைச்சரிடம் மனு

A

Admin

October 17, 2026 • 03:29 AM

கீழக்கரை புதிய அரசு மருத்துவமனையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி தவெக  நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் அமைச்சரிடம் மனு

கீழக்கரை புதிய அரசு மருத்துவமனையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி தவெக நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் அமைச்சரிடம் மனு!


ராமநாதபுரம் 


ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட 'NEW CATH LAB' திறப்பு விழா (15.10.2026) நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே. ஜி. அருண்ராஜ்யிடம் கீழக்கரை தவெக நகர் செயலாளர் ஆசிக் ரஹ்மான் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், கீழக்கரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு மருத்துவமனையை உடனடியாகப் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனக் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்சமயம்நடைபெறும் மருத்துவச் சேவை குளறுபடிகள்குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் , இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

(மனுவில் குறிப்பிடப்பட்டவை)

  அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்,

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நலன் கருதி, எங்களது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கீழ்க்கண்ட முக்கிய மருத்துவக் கோரிக்கைகளைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். பொதுமக்களின் நீண்ட நாள் தேவைகளையும், அவர்கள் சந்தித்து வரும் சிரமங்களையும் களைந்திடும் வகையில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுகொள்கிறோம்:

 கீழக்கரை புதிய அரசு மருத்துவமனை திறப்பு:

கீழக்கரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு மருத்துவமனைப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், அதனைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தெளிவான கால அட்டவணையை அறிவித்து, விரைந்து திறந்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.

 மருத்துவர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை:

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் சில மருத்துவர்கள், சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய நோயாளிகளுக்குச் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்வதாகவும், அவர்களைத் தங்களின் சொந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற வற்புறுத்துவதாகவும் புகார்கள் உள்ளன. இத்தகைய முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 நடமாடும் இரத்தம் சேகரிப்புப் பேருந்து (Mobile Blood Unit Bus):

இராமநாதபுரம் அரசு மருத்துவமனை தற்போது மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இரத்ததான முகாம்களைத் திறம்பட நடத்தவும், இரத்தத் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும் நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் இரத்ததானப் பேருந்து (Mobile Blood Donation Bus) உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, மேற்சொன்ன நியாயமான கோரிக்கைகளைத் தாங்கள் தீவிரமாகப் பரிசீலித்து, இராமநாதபுரம் மாவட்ட மக்களின் நல்வாழ்விற்காக விரைந்துநடவடிக்கை எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என கூறிப்பிட்டுள்ளார்

- Advertisement -