கீழக்கரையில் பெண்ணை மிரட்டி நகை பறித்த வழக்கில் 5 பேர் கைது
கீழக்கரையில் பெண்ணை மிரட்டி நகை பறித்த வழக்கில் 5 பேர் கைது!
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுல்தானியா (48) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை கத்தி முனையில் மிரட்டி நகைகளை பறித்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு தப்பிசென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சுல்தானியா கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார், இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில், கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் தலைமையில், சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்,
இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் நாகேஸ்வரன், ஜான் டேவிட், ஹர்சத் அலி, கார்த்திக், சண்முக மணி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.