குன்னூர் அருகே கார் மீது விழுந்த பாறைகள் ஒருவர் உயிரிழப்பு
குன்னூர் அருகே கார் மீது விழுந்த பாறைகள் ஒருவர் உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ராட்சத பாறை ஒன்று சரிந்து அவ்வழியாக சென்ற கார் மீது விழுந்ததில் காரின் பின்புறம் முற்றிலுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இந்த காரில் பயணித்த 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.