கோவை பெண் வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கம் வென்று சாதனை
கோவை பெண் வித்யா ராம்ராஜ் மூன்று பதக்கம் வென்று சாதனை
மூணு பொட்ட பசங்கள பெத்துட்டு எதுக்கு பொண்ணுங்கள விளையாட்டுக்கெல்லாம் அனுப்புற சீக்கிரம் கல்யாணம் பண்ணி வை.. சாதனை மங்கையான வித்யா ராமராஜன் பெற்றோருக்கு ஊர் மக்கள் கொடுத்த இலவச ஆலோசனை...
ஆனால் சற்றும் ஊர் மக்கள் கூறுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் ஊக்கமளித்து சாதனை பெண்மணிகளாக விளங்குவதற்கு அவர்கள் பெற்றோர்கள் உறுதுணையாக நின்று உள்ளார்கள்... ஆம் வித்யா ராமராஜ் இரட்டையர் ஆவார் அவருடன் பிறந்த இன்னொருவரும் விளையாட்டு வீராங்கனை திகழ்ந்து வருகிறார்...
வித்யா ராமராஜன் பெற்றோர்களின் வருமானம் பெரிதாக சொல்வதற்கில்லை... வாடகை வீட்டில் குடியிருந்தபோதுதான் பெண் பிள்ளைகள் இருவரும் தடகளத்தில் கால் வைத்துள்ளார்கள்... ஷூ வாங்க கூட வசதி இல்லாத சூழ்நிலை...
மின்னல் வேகத்தில் ஓடும் வித்யா ராமராஜனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது காலனி கிழிந்து கால்களில் ரத்தம் சொட்ட சொட்ட முதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார் அதுதான் அவரது தொடக்க புள்ளி...
இன்றளவும் கூட வித்தியா ராமராஜன் சாதனையை பேசும்போது அவர் வெறும் காலில் ஓடிய இந்த ஆரம்பகட்ட நாட்களை நினைவு கூறாமல் நம்மால் இருக்க முடியாது... காலில் ரத்தம் வழிந்தாலும் மன உறுதியுடன் ஓடி முதலிடம் பிடித்தார்...
அப்போது தொடங்கிய ஓட்டம் தான் இன்று ஜப்பான் வரை சென்று உலக அரங்கில் இந்தியாவிற்கும் நம் தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளார்...
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 55.41 விநாடிகளில் முடித்ததன் மூலம் 4 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த பி.டி.உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் முறியடித்துள்ளார்... இது சாதாரண சாதனையாக எப்படி நம்மால் பார்க்க முடியும்...
தடகளத்தில் தொடர்ந்து சாதித்து வரும் வித்யா ராமராஜன் தற்பொழுதுதான் சொந்த வீடு கட்டி குடிபெயந்துள்ளார் தனது மகள் நிச்சயம் ஒலிம்பிக்கில் மிளிர்வாள் என தந்தையும் தாயும் மெய் சிலிர்த்து பேசுகிறார்கள்... ஒலிம்பிக்கில் சாதனை செய்த பிறகு இவர்களுக்கு திருமணம் என்று முடிவோடு பெற்றோர்கள் ஊக்கமளித்து வருகிறார்கள்...
மூன்று பெண் பிள்ளை வைத்துள்ளான் இவனுக்கு எதற்கு இந்த வேலை என கேலி பேசிய அதே ஊரார் தான் இன்று ஊர் முழுக்க பெரிய பெரிய பிளக்ஸ் அடித்து பெருமையாக வைத்துள்ளார்கள்...
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... சோதனையை சாதனையாற்றிய வீரப் பெண்மணிக்கு கிரேட் சல்யூட்... துணை நின்ற பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்...
வித்யா ராம்ராஜ் (பிறப்பு 20 செப்டம்பர் 1998) தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறார். 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளம் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x400 கலப்புப் பிரிவில் வெள்ளியும் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் வென்றார்.இவர் மூன்று முறை தேசிய போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். வித்யா 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சீனாவின் ஹாங்சோவில் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் ஓடி 1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பி. டி. உஷா செய்த இந்திய தேசிய சாதனையை சமன் செய்தார். இவர் அக்டோபர் 3 அன்று 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். முகம்மது அச்மல் வாரியத்தோடி, ராஜேஷ் ரமேஷ் மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தற்போது முதல் தங்கப் பதக்கம்!
கிரண் பஹால், எம்.ஆர். பூவம்மா, பிராச்சி மற்றும் விதத்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3:29.69 நிமிடங்களில் இலக்கை எட்டி மகளிர் 4X400 மீட்டர் தொடர் போட்டியில் தங்கப் பதக்க்த்தை கைப்பற்றியுள்ளது.
இந்தியா வெல்லும் முதல் தங்கம் இது.