Loading...

சங்கரன் கோவிலில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சிறப்பாக பணியாற்ற வேண்டும் டி பி சி களப்பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் லட்சுமி அறிவுரை

A

Admin

September 26, 2026 • 12:43 PM

சங்கரன் கோவிலில்  டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சிறப்பாக பணியாற்ற வேண்டும் டி பி சி களப்பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் லட்சுமி அறிவுரை

சங்கரன் கோவிலில்
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சிறப்பாக பணியாற்ற வேண்டும் டி பி சி களப்பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் லட்சுமி அறிவுரை

சங்கரன் கோவில்: செப்:27

சங்கரன்கோவில் நகராட்சி டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு களப்பணியாளர்களுக்கு நகராட்சி கமிஷனர் லட்சுமி ஆலோசனைகள் மற்றும் அறிவுரை வழங்கினார் பொதுமக்களை சந்திக்க 30 வார்டு களுக்கு செல்லும் நகராட்சி டிபிசி பணியாளர்கள் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வகையில் டி பி சி பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் பொது மக்களை சந்திக்கும் போது டெங்கு காய்ச்சல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் சத்தான பழ வகைகளை சாப்பிடும்படியும் உணவுகளில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளும் படியும், குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குபடியும் சளி இருமல் காய்ச்சல் காணப்பட்டால் உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவம் பார்க்கும் படியும் மேலும் வீடுகளில் குடிநீர் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் படியும் ட்ரம்கள், குடங்கள் வாளிகள் ஆகியவற்றில் தண்ணீர் இருந்தால் நன்றாக மூடி வைத்து சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்த வேண்டியும் குடியிருக்கும் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் சாக்கடை நீர் மற்றும் கழிவு நீர் களில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதை தடுக்கும் வகையில் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக பொது மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கும்படியும் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியாளர்கள் திறமையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் லட்சுமி டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

- Advertisement -