Loading...

சம்பந்தமே இல்லாமல் அடிக்கடி மின் வெட்டு மின் அலுவலகத்திற்க்கு போன் செய்தால் முறையான பதில் இல்லை

A

Admin

October 05, 2026 • 03:21 PM

சம்பந்தமே இல்லாமல் அடிக்கடி மின் வெட்டு மின் அலுவலகத்திற்க்கு போன் செய்தால் முறையான பதில் இல்லை

ஒரு கிராமப்புற வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு எடுத்துகாட்டாக அமையும் கிராமங்களில் சாலை வசதி , குடிநீர் வசதி , மின்சாரவசதியை பொருத்துள்ளது அந்த பகுதி சிறக்க ஆனால் இந்த மூன்றும் இல்லாத நிலையில் உள்ளது மதுரை நகரை ஒட்டியுள்ள கருப்பாயூரணி அடுத்த சக்கிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கல்மேடு அஞ்சுகம்நகர் பகுதி முறையான சாலை வசதி இல்லை , குடிநீர் வசதி இல்லை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினம்தோறும் பணம் கொடுத்து குடிநீர் வாங்குகின்றனர் இது ஒரு வியாபாரமாக செய்து வரும் முதலாளிகள் மற்றும் இந்த பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது ஆனால் போக்குவரத்திற்க்கு லாயிக்கில்லாத சாலைகள் உள்ளன. இரவு நேரங்களில் சம்பந்தமில்லாமல் தொடர் மின் வெட்டு அதிகரித்துள்ளது சம்பந்தப்பட்டவர்களிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டால் முறையான பதில் இல்லை., இந்த பகுதியில. உள்ள மின் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஓன்று அல்லது இரண்டு பேர்கள் மட்டும் துறை சார்ந்தவர்களாக இருக்கின்றனர் மற்றவர்கள் இங்கு ஒப்பந்த அடிப்படையில். பணியாற்றுகின்றனர் ஒப்பந்த அடிப்படையில். பணியாற்றுபவரகள் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .மற்றும் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்தால் போன் எடுப்பதே இல்லை இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மற்றும் கல்மேட்டில் இருந்து இனமனூர் வரை சாலை விளக்குகள் இல்லை இரவு நேரங்களில் அடிக்கடி இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடந்து வருகிறது மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர் இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மின்சார துறை அமைச்சரும் உடனே இதற்க்கு தீர்வு காணவேண்டும் இல்லையேல் அடுத்த கட்டமாக முக்கியமான சாலையில் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கின்றனர்.

- Advertisement -