சம்பளம் முன்கூட்டியே வரவு வைப்பு
சம்பளம் முன்கூட்டியே வரவு வைப்பு: பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனையில் தவெக சார்பில் இனிப்புகள் வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்!
அக் 04
தமிழ்நாட்டில் வரவிருக்கும் தொடர் வங்கி விடுமுறையைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 5 நாட்களுக்கு முன்பாகவே அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தொழிலாளர்களின் நலன் கருதி இத்தகைய விரைவான நடவடிக்கை மேற்கொண்டமைக்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் சிறப்பு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக பெரியகுளம் கிளை தலைவரும், மண்டல தொழிற்சங்க பொறுப்பாளருமான கார்த்திக் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பணிமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் மற்றும் இணைச் செயலாளர் சேக் அலி ஆகியோர் பங்கேற்று, போக்குவரத்து தொழிலாளர் சங்க அமைப்பினை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், புதிய உறுப்பினர்களை இணைப்பது குறித்தும் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் போக்குவரத்து கழக தொழிற்சங்க நிர்வாகிகள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.