சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் கர்ணாத்தா கிளை சார்பில் மருத்துவ முகாம்
சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் கர்ணாத்தா கிளை சார்பில் மருத்துவ முகாம்
ரியாத், செப்.25-
சவுதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு, (IWF) இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் கர்ணாத்தா கிளை மற்றும், அல் அபீர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கர்ணாதா பகுதியில் உள்ள அல் அபீர் மருத்துவமனையில் காலை 8 மணி முதல் நடைபெற்ற இந்த முகாமை, ரியாத் இந்திய தூதரக கம்யூனிட்டி வெல்பர் கவுன்சிலர் ஒய்.கே.சபீர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
காலை முதல் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் உடல்நிலையைப் பரிசோதித்துக்கொண்டனர். மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் 260-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் இந்நிகழ்வில்
தப்ரஜ் அமைப்பு அகமது இம்தியாஸ் தூதரக ஸ்டேரிங் கமிட்டி நிர்வாகி முகைதீன் சலீம் தமிழ்ச் சங்கத் தலைவர் அலெக்ஸ் RIA பொறுப்பாளர் அருண் என்ஆர்டிஐஏ பொறுப்பாளர்
மருத்துவர் சந்தோஷ் வசீம் ராஜா இந்திய தமிழ்ச் சங்க சரவணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை மண்டல தலைவர் நூர் முஹம்மது தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, கலந்துகொண்ட அனைவருக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மண்டல இணைச் செயலாளர் கிளை பொறுப்பாளர் ஷாகீர் பேக்,மண்டல சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா, கர்ணாதா கிளை தலைவர் ஷேக் மைதீன் பாதுஷா ஆகியோர் நன்றி கூறினர்.
முகாம் சிறக்க இந்தியன் வெல்ஃபேர் ஃபார்ம் ரியாத் மண்டல கிளை முதல் மண்டலம் வரை உள்ள சகோதர்கள் பம்பரமாய் உழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.