சாயல்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
சாயல்குடியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் அலுவலகத்தின் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சாயல்குடி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கடலாடி வட்டார ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார், கடலாடி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கமலிமீனாள் தலைமை வகித்தார், சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராமச்சந்திரன், தமிழக வெற்றி கழகத்தின் சாயல்குடி ஒன்றிய செயலாளர் வீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர், நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி கர்ப்பகாலத்தில் பரிசோதனைகள் மருத்துவம் சார்ந்த திட்டங்கள் பற்றியும் தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றியும் மத்திய மாநில அரசுகள் பெண்கள் நலன், குழந்தைகள் சார்ந்த திட்டம் பற்றியும் விரிவாக பேசினார்கள் பிறகு கலந்து கொண்ட தாய்மார்கள் அனைவருக்கும் பூ மாலை அணிவித்து , மஞ்சள்,குங்குமம், பழங்கள், தாலிக்கயிறு, தட்டு அனைத்தும் சீர்வரிசையும் வழங்கி கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சாயல்குடி மேற்கு ஒன்றிய பொருளாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய இணைச்செயலாளர் கே.எம்.கண்ணன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கார்த்திகை சேதுபதி,மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் பிரதீப், ஸ்டாலின் விஜய், மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள் நிறைவாக மேற்பார்வையாளர் பண்ணையரசி நன்றி கூறினார்.