Loading...

சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும், சின்னாளபட்டி ட்ரீம்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி.

A

Admin

November 02, 2026 • 12:28 PM

சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும், சின்னாளபட்டி ட்ரீம்ஸ்  ரோட்டரி கிளப்பும் இணைந்து  சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற  200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  நிகழ்ச்சி.

சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும், சின்னாளபட்டி ட்ரீம்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி. திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப்பும், சின்னாளபட்டி ட்ரீம்ஸ் ரோட்டரி கிளப்பும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த போதையில்லா தமிழகத்தில் உருவாக்கும் விதமாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.சின்னாளப்பட்டி பிரிவில் விழிப்புணர்வு பேரணியை காந்திகிராம ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஜெயராம், சின்னாளப்பட்டி ரோட்டரி கிளப்பின் தலைவரும், சர்வதேச நடுவருமான மாஸ்டர் எம். பிரேம்நாத், செயலாளர் பிரேம்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களுடைய கால்களில் ஸ்கேட்டிங் கட்டிக் கொண்டு சின்னாளப்பட்டி பிரிவில் இருந்து திருநகர், ஆஷா தியேட்டர் ரோடு பூஞ்சோலை, மேட்டுப்பட்டி வழியாக சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் வரை சென்றடைந்து மீண்டும் பூஞ்சோலை வழியாக சின்னாளப்பட்டி பிரிவு வந்தடைந்து பேரணி நிறைவுற்றது. இந்தப் பேரணியின் போது ஸ்கேட்டிங் கட்டிக்கொண்டு ஊர்வலமாக சென்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிர்ப்பான முழக்கங்களையும் , போதை பொருள் ஒரு தீய சக்தி என கோஷமிட்டபடி சென்றனர். இந்தப் பேரணியில் சின்னாளப்பட்டி ட்ரீம்ஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், வணிக சங்க நிர்வாகிகளும், பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் பிரச்சார பேரணியில் பெற்றோர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை ஊக்கவித்தனர்.

- Advertisement -