சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தின அரசு விழா
சிவகங்கை மாவட்டம், மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தின அரசு விழாவினை” முன்னிட்டு, திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் , குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் பி.மதன்ராஜா, சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோர், மருதுபாண்டியர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்), ஏ.குழந்தை ராணி நாச்சியார் (சிவகங்கை), டி.இளங்கோவன் (மானாமதுரை), எம்.வி.கருப்பையா (சோழவந்தான்), எஸ்.ஆர்.தங்கபாண்டி (மதுரை மேற்கு),எம்.எம்.கோபிசன் (மதுரை தெற்கு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.