Loading...

சிவகங்கையில் கிருஷ்ணசாமியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

A

Admin

October 01, 2026 • 02:28 PM

சிவகங்கையில்  கிருஷ்ணசாமியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில்
கிருஷ்ணசாமியை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


சிவகங்கை , அக் -2
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சிவகங்கைத் தொகுதி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவிஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியை கண்டித்து கட்சியின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். அப்போது வெற்றி விஜயன் மானாமதுரை தொகுதி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பாலையா , காரைக்குடி தொகுதி மாவட்டச் செயலாளர் உஞ்சனை சரவணன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர்கள் திருமாஆனந்த் சேதுராமன் ஆகியோர் ....
ஆர்ப்பாட்ட குரல் எழுப்பிய போது
கண்ணியமிகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் , சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களையும் வன்மத்தோடு தொடர்ந்து அவதூறு செய்யும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார் . அரசியல் அனாதை - என்ற நிலையில் இருக்கும் கிருஷ்ணசாமி வன்மத்தோடு பேசும் இது‌ போன்ற நிலைப்பாட்டை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

- Advertisement -