Loading...

சிவகங்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் - திட்டம்

A

Admin

September 28, 2026 • 05:18 PM

சிவகங்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் - திட்டம்

சிவகங்கையில் தாய்மாமன் தங்க மோதிரம் - திட்டம்


தொடங்கி வைத்த 

மாவட்ட ஆட்சியர்:


சிவகங்கை:செப்: 29

 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து நிறைவு பெற்றபின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார். அப்போது குழந்தையின் தாய்மார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 - தாய்மார்கள் , காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 52 - தாய்மார்கள் என மொத்தம் 82 - தாய்மார்களின் குழந்தைகளுக்கு முதல்க் கட்டமாக தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கலைவாணி, மாவட்ட மருத்துவ அலுவலர் மீனாட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -