சும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,மதுரைக்கு வந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்
சும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,மதுரைக்கு வந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஸ்குமார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடரந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அண்ணா பேருந்து நிலையம் புதிய ரவுண்டானாவில் நிறுவப்பட்டுள்ள, தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் மற்றும் தியாகிகள் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.