Loading...

செய்தியாளர் என்று கூறி பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

A

Admin

November 01, 2026 • 08:09 AM

செய்தியாளர் என்று கூறி பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

செய்தியாளர் என்று கூறி பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது குன்னூர் போலீசார் நடவடிக்கை குன்னூர் நவ 01 செய்தியாளர் என்று சொல்லி பல மோசடிகள் செய்து குன்னூர் அருகே உள்ள கொலகொம்பை கிராம பெண்ணிடம் மிரட்டி அத்துமீரலில் ஈடுபட்ட இளைஞரை குன்னூர் போலீசார் கைது செய்தனர் குன்னூர் தாலுகா கக்காச்சி பாரதிநகரை சார்ந்த ராஜன் என்பவர் மகன் முரளிவளவன் 31 என்பவர் செய்தியாளர் எனக்கூறி நீலகிரி மாவட்டம் குன்னூர் கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மர வியாபாரிகள் கட்டிட காண்ட்ராக்டர்கள் தோட்ட உரிமையாளர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் குன்னூர் கோத்தகிரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன மேலும் அரசு அதிகாரிகள் காட்டேஜ் உரிமையாளர்கள் வியாபாரிகள் ஆகியோரிடம் பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் என்று கூறி பணம் பறித்து வருவதாக பல புகார்கள் எழுந்தன இந்நிலையில் கக்காச்சி பகுதியில் பெட்டி கடை நடத்தி வரும் பெண் ஒருவரை மிரட்டி வருவதாகவும் செல்போனில் பலமுறை வேறு விதமாக பேசி வருவதாகவும் குன்னூர் கொலகொம்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் உண்மை நிரூபிக்கப்பட்டது அறிந்து அவர் போலி நிருபர் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அவர் பற்றிய தகவல் தெரிவித்தவுடன் ஆட்சியரின் உத்தரவுப்படி முரளி வளவன் மீது மோசடி வழக்கு மற்றும் பெண்ணை மிரட்டியதற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படி கைது செய்து அவரை குன்னூர் சிறையில் அடைத்தனர்

- Advertisement -