Loading...

செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

A

Admin

October 18, 2026 • 01:58 PM

செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்


டிஎஸ்பி நேகா பங்கேற்று மாணவ மாணவிகள் இடையே கலந்துரையாடல் 

 


ராமநாதபுரம், அக்.19-

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை தடுப்பு குழுவால் மாணவர்களுக்கு போதைப்பொருள் மட்டும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் செரெபியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை உரை ஆற்றினார். 

ராமநாதபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நேகா கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகளையும் அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் தெளிவாக எடுத்துக் கூறினார். மேலும் போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

தொடர்ந்து தேவிபட்டினம் சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வீர பெருமாள் டெங்கு தடுப்பு பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் டெங்கு காய்ச்சல் வரும் முன் எவ்வாறு தடுப்பது மற்றும் டெங்கு அறிகுறி பற்றி தெளிவாக கூறினார். பின்னர் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தினர். கலந்து கொண்ட மாணவர்களை கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா சையது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா செய்த அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பாத்திமா சானாஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

உடற்கல்வி இயக்குனர் ரூபிணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். என் எஸ் எஸ் திட்ட அலுவலர் வள்ளிநாயகம், உடற் கல்வி இயக்குனர் சவேரியார் மற்றும் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் எஃப் சி மேரி நன்றி கூறினார்.

- Advertisement -