Loading...

சேது பொறியியல் கல்லூரியில் 31 வது ஆண்டு விழா

A

Admin

September 30, 2026 • 02:37 PM

சேது பொறியியல் கல்லூரியில் 31 வது ஆண்டு விழா

சேது பொறியியல் கல்லூரியில் 31 வது ஆண்டு விழா:

காரியாபட்டி:அக்:1

மதுரை அருகே
உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது .
நிகழ்விற்கு, கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலில் தலைமை ஏற்றார். கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனி முகைதீன் சீனி முகமது அலி யார் மரைக்காயர் நிலோஃபர் பாத்திமா நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர்.
முதல்வர் சிவக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
ஐ க்யூ ஏசி டீன் சிவரஞ்சனி வரவேற்புரை வழங்கினார் .
டீன் ஷாநவாஸ் நன்றி உரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பேச்சாளர் ஊடகவியளர் கோபிநாத் சந்திரன், ரெனால்ட் நிசான் டெக் மனிதவள மேம்பாட்டு துறைத் தலைவர் பாலு கன் நாகேந்திரன், சென்னை கேண்டி டெக் ஏ வி எஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த போது மேலாளர் மற்றும் முன்னாள் மாணவர் பாக்யராஜ் கலந்து
கொண்டு பேசினார்கள்.
மாணவர்களுக்கு
சிறப்பான சாதனை புரிந்தவர்கள்
சிறப்புத் திறன் சிறந்த இறுதியாண்டு மாணவர்
என் பி டி எல்
ஆராய்ச்சி மற்றும் திட்டப் போட்டி முதல் மதிப்பெண் பெற்றமைக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர்களுக்கு, ஆராய்ச்சி ஆராய்ச்சி கட்டுரைகள் புதிய கண்டுபிடிப்புகள் ஐந்து முதல் 25 ஆண்டு வரை பணியாற்றியவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் பாலு கன் நாகேந்திரன் பேசுகையில்,
பொறியியலின் எதிர்காலம் நீங்கள் எங்கு படிக்கிறீர்கள் என்பதில் இல்லை; கற்றுக்கொள்ளவும், மாற்றங்களுக்கு ஏற்ப உங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும், புதியவற்றை உருவாக்கவும் நீங்கள் எவ்வளவு தயாராக இருக்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கு கல்வி வளாகம் உள்ளூரில் இருக்கலாம்ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் உலகளாவியவை. தொழில்நுட்பத்தின் மீது ஆர்வத்துடன் இருங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) கற்றுக்கொள்ளுங்கள், சிறப்பாகத் தொடர்புகொள்ளும் திறனை வளர்த்துக்
கொள்ளுங்கள், புதிதாக ஏதாவது உருவாக்குங்கள், பணிவுடனும் தொடர்ந்து கற்றுக்
கொள்ளும் ஆர்வத்துடனும் இருங்கள். சிறப்பு விருந்தினர்
கோபிநாத் சந்திரன் பேசுகையில், இன்றைய தலைமுறைகள் தங்களது சவால்களை தாங்களே எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது மாணவர்கள் ஆசிரியர்கள் கவனிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும் மாணவர்கள் தங்களது நேர மேலாண்மையை சரியாக கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினர் காமராஜ் சேது கோடு ஸ்னோவா எஸ் ஐ சி லோகோ வீடியோக்களை வெளியிட்டு பரிசுகள் வழங்கினார் நிகழ்வினை கல்லூரி துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.

- Advertisement -