சேலம் குரங்கு சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பன் ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்
சேலம் அக் 21 - விஜயதசமியை முன்னிட்டு சேலம் குரங்கு சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பன் ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், செய்து பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து
வித்யாரம்பத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு எழுத்தறிவூட்டும் வைபவத்தில் சரஸ்வதியை வணங்கி குழந்தைகளின் நாவில் தேனால் ஓம் என சுழியிட்டு உயிரெழுத்துகள் எழுதப்பட்டன.இந்நிகழ்வில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் தலைவர் நடராஜன், செயலாளர் சண்முகம் பொருளாளர் சரவணப் பெருமாள் உட்பட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்தனர்.மேலும் பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.