சேலம். அக்.28 சேலம் மாவட்டத்தில் 20 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5.05 கோடி வங்கிக் கடன்!
சேலம். அக்.28 சேலம் மாவட்டத்தில் 20 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5.05 கோடி வங்கிக் கடன்! சேலம் மாவட்டத்தில் சிறப்புக் கடன் வசதியாக்கல் முகாம் மூலம் 20 புதிய தொழில் முனைவோருக்கு ரூ.5.05 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் ஒப்பளிப்பு ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், பயனாளிகளுக்கு வங்கிக் கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பொறுப்பு கோமகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னா பாலமுருகன், ஆவின் பொது மேலாளர் . ஜெ. நாராயணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர