Loading...

ஜமுனாமரத்தூரில் பழங்குடியின மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கட்டிடம் திறப்பு

A

Admin

October 13, 2026 • 03:05 PM

ஜமுனாமரத்தூரில் பழங்குடியின மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கட்டிடம் திறப்பு

ஜமுனாமரத்தூரில்
பழங்குடியின மாணவிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கட்டிடம் திறப்பு


திருவண்ணாமலை அக்.13-


திருவண்ணாமலை- வேட்டவலம் சாலை ராஜந்தாங்க jiல் அருகே உள்ள தலாக்குளத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் போப் நிறுவனத்தின் 40-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
கடந்த 39 ஆண்டுகளாக போப் நிறுவனம் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வளர்ச்சியிலும் விதவைகள்¸ முதியோர்கள் முன்னேற்றத்திலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக ஜவ்வாது மலை¸ கல்ராயன் மலை வாழ் மக்களுக்காக சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஜமுனாமரத்தூரில் பழங்குடியின பெண்களுக்கான பயிற்சி மையம் துவங்கி 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகளுக்கு தையல், கணினி பயிற்சிகளை அளித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக ஜமுனாமரத்தூர் வெள்ளி கொட்டாய் என்ற ஊரில் மலை மாணவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி கட்டிடத்தை போப் நிறுவனம் கட்டித் தந்துள்ளது.
இதன் திறப்பு விழா கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது.
அனைவரையும் பயிற்சி மைய இயக்குனர் ஆர்.எல். இன்பராஜ் வரவேற்றார். போப் தொண்டு நிறுவன தலைவர் ஆர்.எல்.ரொசாரியோ தலைமை தாங்கினார். புதிய கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த அருட்தந்தை ஜான் பிரிட்டோ திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பிறகு தையல், கணினி பயிற்சி பெற்று வரும் 30 மாணவிகளுக்கும், 40 முதியவர்களுக்கும், 40 மூதாட்டி களுக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் போப் நிறுவனத்தின் 40-வது ஆண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த விழாவில் ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த அ.வினோத், கோவை லூயிஸ், ஆசிரியர் அம்புரோஸ், கரோலின், அற்புதராஜ், வார்டன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
40 வது ஆண்டு தொடக்கத்தை குறிப்பிடும் வண்ணம் 40 மரக்கன்றுகள் நடப்பட்டது.
முன்னதாக திருவண்ணாமலை அடுத்த நா. கெங்கம்பட்டு செயிண்ட் பால்ஸ் உயர்நிலை பள்ளியில் போப் தொண்டு நிறுவனம் கட்டித் தந்த உயர் தொழில்நுட்ப ஆய்வகம், அறிவியல் ஆய்வகம், நூலகம் ஆகியவற்றை மாவட்ட கல்வி அலுவலர் த.தமிழ்செல்வன் திறந்து வைத்து போப் தொண்டு நிறுவனத்தின் கல்விப் பணிகளை பாராட்டினார்.
இதே போல் தலாக்குளம் போப் வளாகத்தில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதன் தலைவர் ஆர்.எல்.ரொசாரியோ 40 இளம் விதவைகள்¸ 80 முதியோர்கள்¸ 75 மூதாட்டிகள்¸ 60 குழந்தைகள் உள்பட என 300 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வளாகத்தில் 40 மரக்கன்றுகளையும் நட்டு உணவு உத்தரவாதம், நீர் மேலாண்மை, கழிவு மேலாண்மை போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் துவக்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, தாட்கோ மேலாளர் பேர்லைன், வேளாண் இணை இயக்குனர் மலர்விழி, அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.ரேணுகோபால், பேராசிரியர்கள் நெடுஞ்செழியன், ஜெயச்சந்திரன், அருள் தந்தை ஜேம்ஸ், விக்டர், ஜான் பிரிட்டோ, ஆசிரியர்கள் அற்புதராஜ், ஆம்ப்ரோஸ், ஆதி தமிழர் பேரவை ஏ.வினோத், ரோட்டரி சங்கத் தலைவர் விவேக் அரவிந்த், தாமஸ் ஜெயபாலன், போப் ஆலோசகர் தாசையன், பிரின்சி, மேரி அமுதா, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -