தஞ்சாவூரில் கவிஞர்கள் புகழேந்தி, மோகன் எழுதிய 'ஹைக்கூ 'நூல்கள் வெளியிட்டு விழா
தஞ்சாவூரில் கவிஞர்கள் புகழேந்தி, மோகன் எழுதிய 'ஹைக்கூ 'நூல்கள் வெளியிட்டு விழா
தஞ்சாவூர் அக்டோபர் 5
தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் முனைவர் அய்யாறு ச. புகழேந்தி எழுதிய செர்ரிப்பூக்கள் ஹைக்கூ நூலும் ,கவிஞர் கவிநிலா மோகன் எழுதிய நீரில் அசையும் நிழல்கள் ஹைக்கூ நூலும் வெளியீட்டு விழா தஞ்சாவூர் வங்கி ஊழியர் சங்க கட்டிடரங்கில் நடைபெற்றது
விழாவில் முதுகலை த்தமிழாசிரியர் முனைவர் செயலட்சுமி தலைமை தாங்கினார் .முன்னதாக கரந்தை ஜெயக்குமார் அனைவ ரையும் வரவேற்றார்
கவிஞர் தஞ்சை இந்துமணி இன்னிசை யுடன் நிகழ்ச்சி துவங்கியது.தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற துணைத் தலைவர் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
நூல்களை வெளியிட்டு பேராசிரியர் முனைவர் கோவை மணி சிறப்புரையாற்றினார் முனைவர்குப்பு வீரமணி, எழுத்தாளர் விச்வநாதன் நூல்கள் மதிப்புரை வழங்கினார்கள்.
உலக தமிழ் கவிஞர் பேரவையின் பொதுச் செயலாளர் வெற்றி பேரொளி, ஏடகம் அமைப்பின் நிறுவனர் மணிமாறன் ,வெற்றி தமிழர் பேரவை மாநில துணைப் பொதுச் செயலாளர் யோகம்செழியன் ,புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எழுத்தாளர் அண்டனுரர் சுரா, சிவக்குமார், இராம.சந்திரசேகரன் திருவையாறு பாரதி இயக்கத்தின் அறங்காவலர் பிரேமசாயி ,கவிஞர் நீடா இளஞ்செழியன் ஆகியோர் நூல்கள் பெற்று வாழ்த்துரை வழங்கினர்
நூலாசிரியர்கள் கவிஞர் முனைவர் அய்யாறு புகழேந்தி, கவிநிலா மோகன் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள் .
நிகழ்ச்சியில் அழகம்மாள் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் தனபாலகிருஷ்ணன், காந்திநாதன் ,பேராசிரியர் விஜயராமலிங்கம், பாண்டுரங்கன் ,நகைச்சுவை மாமன்ற செயலாளர் ஜெயக்குமார், திருவையாறு சரஸ்வதி அம்பாள் தொடக்கப்பள்ளி தாளாளர் பஞ்சநத்தம், கவிஞர் சார்லி மேன் ,கவிஞர் தஞ்சை குமார் ,தந்தி டிவி செல்லதுரை கவிஞர் அய்யனார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. நிகழ்ச்சியில் கவிஞர் அரவிந்தன் ஒருங்கி ணைத்து. நன்றி கூறினார்