தஞ்சாவூர் மாநகராட்சியில் டெங்கு கொசு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர் மாநகராட்சியில் டெங்கு கொசு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள்
மாவட்ட கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர் அக்டோபர் 4
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற டெங்கு கொசு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு தடுப்பு முன்னெச்சரி க்கை பணிகள் நடைபெற்று வருகிறது .கரந்தை பகுதிகளில் உள்ள முதலில் தெரு, செல்லியம் மன் கோவில் தெரு ,மந்தாரடி தெரு, ஒத்த தெரு, வாய்க்கான் காரத் தெரு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் கொசுப்புழு உருவாக காரணமாக இருக்கக்கூடிய டயர்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பூத்தொட்டிகள், தேங்காய் ஓடு, நீர் தொட்டிகள், ஆட்டுக்கல் போன்ற பொருள்களில் தண்ணீர் தேங்காதபடி பார்த்து க்கொள்ள வேண்டும் என்று கலெக் டர் பொது மக்களுக்கு விழிப்புணர் வு ஏற்படுத்தினார்.
மேலும் பருவ மழை முன்னெச்ச
ரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால்களில் தூர் வாரும் பணி களையும் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார் .தொடர்ந்து குப்பைகளை பொதுமக்கள் பொது இடங்களில் கொட்டாமல் வீடுகளில் நான்கு வகையாக தரம் பிரித்து மாநகராட் சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்க ளிடம் கலெக்டர் ரேவதி அறிவுரை வழங்கினார்
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.