தஞ்சாவூர் மாவட்டத்தில் 54 புதிய கட்டிடங்கள் அமைச்சர் வினோத் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 54 புதிய கட்டிடங்கள் அமைச்சர் வினோத் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் செப்டம்பர் 30
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 16.14 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளுக்கான கட்டிடங்களை வேளாண் அமைச்சர் வினோத் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் புதிய பேருந்து கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக புதிய கட்டிடங்களை அமைச்சர் வினோத் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் அங்கன்வாடி மையம், பொது விநியோகஅங்காடி, ஊராட் சி மன்ற அலுவலகம் ,வகுப்பறை கட்டிடம் ,பல்நோக்கு சேவை கட்டிடம் சுகாதார கட்டிடம், மேல்நிலை நீர் தேக்கு தொட்டி, உணவு தானியங்கி கிடங்கு ,சமுதாயக்கூடம், நவீன கால்நடை கொட்டகை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் உள்ளூர் ஊராட்சி யில் பள்ளி உட்கட்டமைப்பு மேம் பாட்டு திட்டத்தின் கீழ் 2 வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய் 16.14 கோடி மதிப்பீட்டில் 54 கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
திருவிடைமருதூர் அருகே செம்பியவரம்பல் ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் பயனடையும் வகையில் 33.11 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க அமைச்சர் வினோத் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், கும்பகோணம் வருவாய் கோட்டாட் சியர் திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.