தஞ்சாவூர் மாவட்டம் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்பு கள் குறித்து கருத்தரங்கு
தஞ்சாவூர் மாவட்டம் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்பு கள் குறித்து கருத்தரங்கு
கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர் அக்டோபர் 1
தஞ்சாவூர் மாவட்டம் உணவு மற்றும் உணவுசார் தொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு கலெக்டர் ரேவதி தலைமையில் நடை பெற்றது
இக்கருத்தரங்கில் கலெக்டர் ரேவதி தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன ங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்த ர தொழில் நிறுவனங்களின் வசதி யாக்கல் அமைப்பு சார்பில் உணவு மற்றும் வேளாண்சார் தொழில் வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது
தமிழ்நாடுஅரசு ரூபாய்1,170 கோடி மதிப்பிலான தமிழ்நாடு வேளாண் தொழில் வழித்தடத்திட்டத்தை அறிவித்துள்ளது .இது தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, ஆகிய ஐந்து டெல்டா மாவட்டங் களில் செயல்படுத்தப்படும்.
தொழில் முனைவோர்கள் தங்க ளது தொழில்களை விரிவு படுத்த உதவும் மானியங்கள் மற்றும் வசதி கள், தொழில் பூங்காக்கள், குளிர் பதனை சேமிப்பு கிடங்குகள், பரிசோதனை ஆய்வகங்கள், போன் ற கட்டமைப்பு வசதிகள், தொழில் முனைவோரின் தயாரிப்புக்கு நல்ல சந்தையும்,நல்ல விலையும் பெற உதவும் சந்தை தொடர்பு மற்றும் வணிக மேம்பாட்டு ஆதரவுகள் என பல்வேறு வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்குகிறது
தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் நிலையில், வேளாண் விளை பொருள்களை மூலப்பொருள்களா க மட்டும் விற்பனை செய்யாமல் அவற்றை நவீன தொழில்நுட்பத் தின் மூலம் மதிப்புக்கூட்டி பதப்படு த்தி சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கூடுதல் வருமான பெற முடியும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறு வனங்களை சேர்ந்தவர்கள் சிறு கடன்கள் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல் தொழில் முனைவோர் களாக உருவாக வேண்டும். வேளா ண்மை ,தொழில் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.
தொழில் தொடங்க விரும்பும் புதிய தொழில் முனைவோருக்கு நிதி உதவி, வங்கி கடன் மற்றும் அரசு அனுமதிகள் உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கையிலும் மேற் கொள்ளப்படும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைவதில், தஞ்சாவூர் மாவட்டம் வேளாண் மற்றும் தொழில் வளங் களை முழுமையாக பயன்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்தார்.
இக்கருத்தரங்கின் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜே .பிரபு ஜெயகுமார் மோசஸ், திட்ட மேலாண்மை அலகின் குழு தலைவர் அனந்த கிருஷ்ணன், தொழில் வணிகத்துறையின் கூடுதல் இயக்குனர் எல். ராமசுப்பி ரமணியன், வேளாண் விற்பனை துறை துணை இயக்குனர் ரா.சுதா, மண்டல மேலாளர் எம்.முத்தையா, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உணவு மற்றும் வேளாண்சார் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்களும், புதிய தொழில் முனைவோர்களும் பங்கேற்றனர்.