Loading...

தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் புகார் மனு

A

Admin

October 16, 2026 • 11:34 AM

தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் புகார் மனு

சேலம்
17-10-2026

தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் புகார் மனு....


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி தம்பிதுரை வீதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டு குடியிருப்பு பகுதியில் தனியார் அலைபேசி கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி தம்பிதுரை வீதி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே இரண்டு தனியார் அலைபேசி கோபுரங்கள் உள்ளன. இந்த நிலையில் மீண்டும் புதியதாக அலைபேசி கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபுரம் அமைக்கும் இடத்திற்கு அருகாமையில் 100 மீட்டர் தொலைவில் அங்கன்வாடி பள்ளி அமைந்துள்ளது. அருகிலேயே மருத்துவமனையும் உள்ளது. இது மட்டுமில்லாமல் கோபுரம் அமைக்கும் இடத்தில் ஏற்கனவே கிணறு உள்ளது இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடியுள்ளனர். ஆனால் மண் பரிசோதனை செய்ததாக கூறி சில ஆவணங்களை காட்டுகின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்ட இரண்டு அலைபேசி கோபுரத்தில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சினால் எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு முதல் நான்கு பேர் கேன்சர் நோயினால் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். ஆகவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து தரும்படி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அலைபேசி கோபுரம் அமைப்பதால் எதிர்கால சந்ததி பாதிக்கப்படுவதாக கூறி ஊர் பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -