Loading...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மதுரை மாவட்டம் சார்பாக நடந்த மாரத்தான்

A

Admin

October 26, 2026 • 03:42 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மதுரை மாவட்டம் சார்பாக  நடந்த மாரத்தான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மதுரை மாவட்டம் சார்பாக நடந்த மாரத்தான்


மதுரை அக் 26


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவித்த சமூக தீமைகளுக்கு தீர்வு கண்ட "நபிகள் நாயகம்" என்ற ஒரு மாதம் பிரச்சாரத்தை முன்னிட்டு புகை, மது, போதை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக இளைஞர்கள் , மாணவர்கள் பங்குபெறும் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதனடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மதுரை மாவட்டம் சார்பாக நடைபெற்ற மாரத்தானை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் தாவூத் கைசர் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அம்ஜத்கான், மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் மன்சூர் அஹமத், மாவட்ட துணை தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அசன் பாட்ஷா, அப்துல்லாஹ், முஹம்மது ஷமீர், சாகுல் ஹமீது, அபுபக்கர் சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மதுரை மாவட்ட துணை மேயர் நாகராஜன் கலந்து கொண்டு புகை, மது, போதை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக நடைபெறும் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இந்த மாரத்தான் கலெக்டர் அலுவலகம் முன்பு துவங்கி ஆவின் பால்பண்ணை, வஃக்ப் வாரிய கல்லூரி வழியாக சென்று ராஜாமுத்தையா மன்றத்தில் முடிந்தது இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்காக மருத்துவ குழு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன மேலும் அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றார்கள்.

- Advertisement -