Loading...

தருமபுரி நகராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகளை நடவு செய்த கமிஷனர்

A

Admin

October 21, 2026 • 03:48 AM

தருமபுரி  நகராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகளை நடவு செய்த கமிஷனர்

தருமபுரி நகராட்சி பகுதியில் 500 மரக்கன்றுகளை

நடவு செய்த கமிஷனர் 


தருமபுரி, அக்.21–


தருமபுரி நகராட்சியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட காந்திபாளையத்தில் உள்ள எஸ்டிபி தளம் அருகே பல்வேறு வகையான சுமார் 500 மரக்கன்றுகள் நடும் விழா, நகராட்சி கமிஷனர் அமுதா தலைமையில் நடைபெற்றது. இதில் கமிஷனர் அமுதா மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார். மேலும் இப்பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து மரமாக வளர நகராட்சி நிர்வாக பணியாளர்கள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தினார். இதில் நகராட்சி செயற்பொறியாளர் பண்பரசன், நகராட்சி அலுவலர்கள் ராஜரத்தினம், ஜெயவர்த்தன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- Advertisement -