தருமபுரியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி செப் 29
தருமபுரியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு
கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி. சிற்றரசு தலைமை வகித்தார். கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.
குறிப்பாக, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய காங்கிரஸ் கட்சியினர், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.