Loading...

தாயகம் திரும்பி வித்யா ராம்ராஜை வரவேற்ற அமைச்சர் ஆனந்த்

A

Admin

October 04, 2026 • 09:25 AM

தாயகம் திரும்பி வித்யா ராம்ராஜை வரவேற்ற அமைச்சர் ஆனந்த்

தாயகம் திரும்பி வித்யா ராம்ராஜை வரவேற்ற அமைச்சர் ஆனந்த்

கோவை அக் :4

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் , கோவை விமான நிலையத்தில் ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜை வரவேற்று சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பல்வேறு சாதனைகள் புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்குமாறும் தெரிவித்தார்
ஆசிய விளையாட்டு தொடரில் வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை தன் வசப்படுத்தியுள்ளார். 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும், 4x400 மீட்டர் கலப்புத் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், மகளிர் 4x400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் வென்று அவர் அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே ஆசிய விளையாட்டு தொடரில் 3 வித பதக்கங்களை வென்று வித்யா ராம்ராஜ் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -