தாயகம் திரும்பியவருக்காக உருவாக்கப்பட்ட தேயிலை தோட்ட பணியாளர்கள் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு
தாயகம் திரும்பியவருக்காக உருவாக்கப்பட்ட தேயிலை தோட்ட பணியாளர்கள்
சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனு
நீலகிரி அக் 21
நீலகிரி மாவட்டத்தில்
தாயகம் திரும்பியவருக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் சார்பில்
மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் தொழிலாளர்களின் குடியிருப்புகள் மிகவும் அவல நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் 1979 க்கு பிறகு இந்த குடியிருப்புகள் இன்று வரை சீரமைக்கப்படாமலே உள்ளது எனவே தற்போதுள்ள தமிழக அரசு இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் குடியிருப்புகளை சீரமைக்க நிதி ஒதுக்கி இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது மேற்கண்ட நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதார அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு தோட்ட கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மருத்துவ வசதிகள் மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குடிநீர் சுகாதாரமான சாலை வசதி ஆகியவற்றையும் ஏற்படுத்தி தர வேண்டுமென அமைச்சர் கமலியிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் தாயகம் திரும்பியோர்
நிர்வாகி தம்பி ராஜா மற்றும் சசி ஜேசுராஜ் தியாகராஜன் மற்றும் சங்கத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.